கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது சொத்து மதிப்பையும் தனது கணவரின் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா காந்தியின் கணவர் சொத்து மதிப்பு போலியானது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
பிரியங்கா காந்தி சமீபத்தில் வேக்கும் மனு தாக்கல் செய்த போது, தனக்கு 12 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், தன்னுடைய கணவருக்கு 37.4 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் மற்றும் 27.6 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், நில ஊழல் வழக்கில் 75 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டிய பிரியங்கா காந்தியின் கணவரின் சொத்து மதிப்பு போலியானது என்று பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் கௌரவ் பாட்டியா கூறிய போது, பிரியங்கா வெளியிட்டுள்ளது அவரது குடும்பத்தினர் சம்பாதித்த ஊழல் சொத்துக்களின் மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரியங்காவின் கணவர் ராபர்ட், "எப்போதெல்லாம் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டுமோ, அப்போதெல்லாம் என் பெயர் பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். இது குறித்து விசாரணை செய்தால், அதை சந்திக்க தயார்" என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.