சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் காதலனை அடித்துவிட்டு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் தான் முக்கிய குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக மேலும் சில கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.