Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவக்குறிச்சியில் தென்னிந்திய அளவில் சேவல் சண்டை

அரவக்குறிச்சியில் தென்னிந்திய அளவில் சேவல் சண்டை
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:18 IST)
கரூர் அருகே களைகட்டிய சேவல் சண்டை ! வரும் 15 முதல் 17 ம் தேதி வரை நடைபெறும் இந்த சேவல் கட்டு நிகழ்ச்சிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
 


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம் வலசு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, சேவல் கட்டு நடத்தப்படுவது வாடிக்கையாகும், இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடையினை தொடர்ந்து சேவல் கட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுவிற்கு இருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சேவல்கட்டிற்கு நீடித்த தடை இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்பு இப்பகுதி பொதுமக்களும், சேவல் ஆர்வலர்களும் கோரிக்கைகள் விடுத்தனர். இதனடிப்படையில், இதே பூலாம்வலசு பகுதியினை சார்ந்த ஆன்ந்த் என்பவர் நீதிமன்றத்தினை நாடி தடையின்மை உத்திரவினை வாங்கியதையடுத்து வரும் 15 ம் தேதி காலை 9 மணி முதல் 17 ம் தேதி வரை சேவல் சண்டை எனப்படும் சேவல் கட்டு நடத்தலாம் என்று உத்திரவு வாங்கியதையடுத்து, தற்போது சேவல் சண்டைக்கு தயாராக ஆடுகளம் சிறப்பாக அப்பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

மாலை 5 மணிவரை தான் ஆட்டம் என்பதினால் சேவல் வளர்ப்பவர்கள் தற்போதே தங்களது சேவல்களை தயார் செய்து வருகின்றனர். மேலும், 4 வருடங்கள் இல்லாத புதுப்பொழிவுடன் இந்த சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை நடைபெறுவதாலும், தமிழகத்திலேயே, இங்கு மட்டும் தான் இந்த சேவல் கட்டுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதினால் தற்போதே ஆடுகளத்தினையும் அசத்தி வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள், கரூர் மாவட்டத்தினுடைய அமைச்சரும்,

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆங்காங்கே பிளக்ஸ் மற்றும் பேனர்களையும் கட்டி அப்பகுதி மக்கள் தற்போதே ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எது எப்படியோ, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும், சேவல் சண்டை ஆகிய இரு நிகழ்ச்சிகளும் தமிழக பாரம்பரிய நிகழ்ச்சிகளே, இந்நிலையில்., இந்த இரு நிகழ்ச்சிகளில், ஏற்கனவே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புத்துணர்வு பெற்று தற்போது பல்லுயிர் பெற்று பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், இந்த சேவல் சண்டை எனப்படுவது இங்கே மட்டும் தான் தமிழக அளவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


சி.ஆனந்தகுமார்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாதியாவது, மதமாவது: ஒரே சான்றிதழில் இந்திய லெவலில் ஃபேமஸ் ஆன பெண்