Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாதியாவது, மதமாவது: ஒரே சான்றிதழில் இந்திய லெவலில் ஃபேமஸ் ஆன பெண்

ஜாதியாவது, மதமாவது: ஒரே சான்றிதழில் இந்திய லெவலில் ஃபேமஸ் ஆன பெண்
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:56 IST)
தமிழகத்தில் ஜாதி, மதமற்றவர் என பெண் ஒருவர் அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). சினேகாவிற்கு சிறு வயதிலிருந்தே சாதி, மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. அது பிடிக்கவும் பிடிக்காது. ஏனென்றால் அவரின் பெற்றோர் அப்படி. தங்களின் மூன்று மகள்களுக்கு சினேகா, மும்தாஜ், ஜெனிஃபர் என்று பெயரிட்டுள்ளனர்.
 
சினேகா தனது ஜாதி, மதத்தின் பெயரை குறிப்பிடாமலேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஜாதி, மதத்தின் மீது நாட்டமில்லாத ஒருவரையே சினேகா திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில் தாம் ஜாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கும்படி சிநேகா திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். இதனை கேட்ட அதிகாரிகள் முதலில் திகைத்து போனார்கள். இது முடியாது எனவும் கூறியுள்ளனர்.
webdunia

பல்வேறு போரட்டத்திற்கு பின்னர் திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சிநேகா ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றுள்ளார்.
 
இவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! என்றி கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்