Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிய பல்வகையை பாதுகாப்பதில் புதிய அணுகுமுறை

Advertiesment
உயிரிய பல்வகையை பாதுகாப்பதில் புதிய அணுகுமுறை
, சனி, 9 பிப்ரவரி 2019 (15:09 IST)
உயிரிய பல்வகையை பாதுகாப்பதில் புதிய அணுகுமுறை என்ன என்ற தலைப்பில் கரூரில் தேசிய அளவிலான விலங்கியல் துறைக்கான கருத்தரங்கு நடைபெற்றது.




கரூர் அடுத்த தாந்தோன்றிமலையில், அமைந்துள்ள கரூர் அரசுக்கலைக்கல்லூரியில், உள்ள ஆடிட்டோரியத்தில் தேசிய அளவிலான விலங்கியல் துறைக்கான கருத்தரங்கு, உயிரிய பல்வகையை பாதுகாப்பதில் மனிதர்களின் புதிய அணுகுமுறை என்ன என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் உயிரியப்பல்வகைமை என்பது உலகில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை, வகை மற்றும் அவற்றின் வேறுபாடுகளைப்பற்றி விளக்கும் அறிவியலாகிய இந்த நிகழ்ச்சியில்., உயிரியப்பல்வகைமை பொருளாதார, கலாச்சார மற்றும் கலைசார்ந்த ஒரு இயற்கைவளமாக இருப்பதினால், அவை பாதுகாப்படுதல் அத்தியாசவசியமாகின்றது. முன்னதாக., இந்த தேசிய கருத்தரங்கின் நடத்தாளரும், விலங்கியல் துறையின் தலைவருமான முனைவர் கே.ராதாகிருஷ்ணன் கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்றார்.

இந்த கருத்தரங்கில், சண்டிகர், ஹைதரபாத் என்று பல்வேறு ஊர்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் முனைவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்த்தினார்கள். மேலும், இந்த பூமியானது, மனிதர்கள் மட்டுமே வாழ்வும் பூமி கிடையாது, விலங்கினங்களும் வாழ்ந்தால் தான் மனிதர்கள் நன்கு வாழமுடியும் என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும், மேலும் புவி வெப்பமடையும் போதும், சுற்றுச்சூழல்கள் மாசு அடையும் போதும், விலங்கினங்கள் ஊருக்குள் குடியேறுவதினால் விலங்கினங்களுக்கு தொல்லை கொடுக்காமல் எப்படி வாழ்வது என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் நன்கு மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தினர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக் மோகம்: தைலமரக்காட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!