மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளான இன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவரும் பெரும்புலவருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கடந்த 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதும் அவரது சிலைகளுக்கு புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் மகாகவி நாளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்