Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவினரை குத்திக்காட்டி ...மு.க ஸ்டாலினை புகழ்ந்த செந்தில்பாலாஜி ?

அதிமுகவினரை  குத்திக்காட்டி ...மு.க ஸ்டாலினை புகழ்ந்த  செந்தில்பாலாஜி ?
, வியாழன், 4 ஜூலை 2019 (16:08 IST)
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இன்று பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, குனிந்து பதவி வாங்காத ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் என்று  தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜிதான் கோடிமுறை குனிந்து பதவியைப் பெற்றவர். அவர் குனிந்தே பதவியை பெற்றதற்கான ஆதாரங்களை கொடுத்தால் அவையே நிறைந்துவிடும்  என்று பேசினார்.
 
இதற்கு குறிக்கிட்ட ஸ்டாலின், தவழ்ந்து சென்ற படங்கள் எங்களிடம் உள்ளது அதைக்கொடுக்கலாமா என்றும்.. நீங்கள் தவழ்ந்து கும்பிடு போடும் காட்சியை காட்டவா என்று கூறியதால் அவையில்  கடும் அமளி உருவானது.
 
இதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் தங்கமணி பேசுகையில், செந்தில்பாலாஜி திமுகவிலிருந்து விலகிச் சென்ற பின்னர், அவர் பெயரை செந்தில்குமார் என்று மாற்றிக்கொண்டார் என்று தெரிவித்தார்.
 
அதற்கு பதிலளித்த செந்தில்பாலாஜி பெயரை மாற்றிக்கொண்டது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார். அப்போது பேசிய முதல்வர் : செந்தில்பாலாஜி அவர் இருக்கும் கட்சி தலைமையைப் புகந்து பேசுவதில் தவறில்லை. ஆனால் அவர் பேசும் போது குனிந்து என்ற வார்த்தையை கூறியதால்தான் இந்த பதிலைக்கூற வேண்டிய சூழல் உருவானதாகக் கூறினார். இதனால் அவையில் ஆளும் அதிமுக உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது.
webdunia
செந்தில் பாலாஜி முதலில் திமுக கட்சியில் 1995 ல் சேர்ந்து, பின்னர் 2000 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவின் இணைந்தார். அக்கட்சியில் முக்கியப்பொறுப்புகளில் இருந்த நிலையில் கடந்த 2015 ல் நீக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்  அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தினகரன் ஆதரவாளராக இருந்தார். அதன் பின் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்த நிலையில் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வானார்.

இன்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை புகழ்வதற்காகத்தான், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்களைக் குறித்து   ’குனிந்து’ பதவியேற்றது தொடர்பாக செந்தில்பாலாஜி  அவையில் கூறியதாகவும் அதனால்  இரு கட்சிகளிடையே  அமளி ஏற்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை சீரழித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி: புதுவையில் நடந்த துயர சம்பவம்