Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை சீரழித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி: புதுவையில் நடந்த துயர சம்பவம்

Advertiesment
இளம்பெண்ணை சீரழித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி: புதுவையில் நடந்த துயர சம்பவம்
, வியாழன், 4 ஜூலை 2019 (15:59 IST)
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸின் சமூக இணையத்தள ஒருங்கிணைப்பாளர், நாடக காதல் செய்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் சிவராந்தம் பேட்டையைச் சேர்ந்தவர் தமிழரசன்.27 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் தமிழரசன் சிவராந்தம் பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

ஒரு நாள் தமிழரசன், அந்த பெண்ணை தனியாக அழைத்துள்ளார். அந்த பெண்ணும் தமிழரசனுடன் சென்றுள்ளார். பின்பு ஆளரவமில்லாத பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச்சென்ற தமிழரசன், ஆசை வார்த்தைகளால் பேசி பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண் கற்பமடைந்தார். இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிந்துவிடுவதற்கு முன்னமே, தனியார் மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

அதன்பிறகு மீண்டும் ஆசை வார்த்தை பேசி பலாத்காரம் செய்துள்ளார். பெண் மீண்டும் கற்பமாகவே, மறுபடியும் தமிழரசனிடம் திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தமிழரசன், மீண்டும் கற்பத்தை கலைக்க சொல்லியுள்ளார்.மேலும் கற்பத்தை கலைத்தபிறகு திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். ஆதலால் மீண்டும் அந்த பெண் கற்பத்தை கலைத்துள்ளார்.

ஆனால் கருவை கலைத்தபின்பு தமிழரசன் அந்த பெண்ணை சந்திப்பதையே தவிர்த்துள்ளார். பின்பு ஒரு நாள் அந்த பெண் தமிழரசனை சந்தித்து திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் தமிழரசன் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியே, இவ்வாறு ஒரு பெண்ணின் வாழக்கையை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதிக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து துரைமுருகன்!