இன்று தமிழக சட்டசபையில் திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் அவை மீண்டும் தொடங்கியது. இன்று அவை கூடிய போது அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தமிழகத்தின் எதிர்கால தலைமை முக ஸ்டாலின்தான். அவர் யாரிடமும் குனிந்து கும்பிட்டு பதவியை பெறவில்லை என தெரிவித்தார்.
இதனால் கடுப்பான அவையில் இருந்த அதிமுகவினர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றார்கள் என எங்களை தொடர்புபடுத்தி செந்தில் பாலாஜி பேசியது தவறு.
செந்தில் பாலாஜி இதுவரை எத்தனை சின்னத்தில் போட்டியிட்டார். எத்தனை கட்சியில் இருந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என கூற, உடனே ஓபிஎஸ் ஜெயலலிதா இருக்கும்போது செந்தில் பாலாஜி எத்தனையோ முறை கும்பிட்டுள்ளார் எனவும் நக்கல் செய்தார்.