அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஜாமீன் தேடி சென்னை அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்ற நிலையில் அனைத்து ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து மீண்டும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் சமீபத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.