அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிவின் ஜாமின் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.
ஆனால் சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தெரிவித்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும் எனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்புக்கு நீதிபதியும் எம்.சுந்தர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.