நேற்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது எனவும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்தார்.
இதனை அடுத்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று தெரிவித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு நீதிமன்றமும் அமர்வு நீதிமன்றமும் மாறி மாறி செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்த கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.