அதிமுகவின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 9-ஆம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது, அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
சமீபத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.
பதவி நீக்கப்பட்ட செங்கோட்டையன் விரைவில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி செங்கோட்டையன் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்