அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா போன்ற பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கோரிய நிலையில், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈபிஎஸ் எடுத்த இந்த முடிவு, அதிமுகவில் தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. பிளவுபட்டவர்களை மீண்டும் இணைப்பதன் மூலம் கட்சியில் ஏற்படும் அதிகாரப் போட்டி மற்றும் குழப்பங்களைத் தவிர்க்க அவர் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கட்சிக்குள் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.