Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

Advertiesment
வெங்காய விலை

Siva

, புதன், 26 நவம்பர் 2025 (17:24 IST)
வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ஒரு ரூபாய் என்ற நிலைக்கு குறைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் மன்ட்சௌர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில், வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நாட்டிலேயே அதிகம் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மல்வா - நிமர் பகுதியில், உற்பத்தி செலவான ரூ.10-12ஐ கூட ஈடுகட்ட முடியாமல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.1 முதல் ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
 
விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், மத்திய அரசு விதிக்கும் 25% ஏற்றுமதி வரி தான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வரியால் வெளிநாடுகளில் போட்டியிட முடியாமல், ஏற்றுமதியாக வேண்டிய வெங்காயம் அனைத்தும் உள்நாட்டுச் ந்தையில் குவிந்து, வரத்து அதிகரித்து, விலை கடுமையாகக் குறைந்துவிட்டது. 
 
உரிய விலை நிர்ணயிக்கப்படவும், ஏற்றுமதி வரியை குறைக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!