அரசியலில் 50 வருடங்கள் அனுபவம் பெற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தவெகவில் இணைந்திருப்பது அந்த கட்சிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அனுபவம் இல்லாத நிர்வாகிகளால் தடுமாறிக் கொண்டிருக்கும் தவெக அகலமும் செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்க ஒருவரால் வழிநடத்தப்படும்போது கண்டிப்பாக எதிர்மறை விமர்சனங்களில் இருந்து தப்பிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
விஜய்க்கு அனுபவிக்க செங்கோட்டையன் பல அரசியல் ஆலோசனைகளையும் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதில் ஒன்றுதான் ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம்
. தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் முன்பு போல மக்களை சந்திப்பதோ, ரோட் ஷோட் நடத்துவதோ நடக்காது. தமிழக போலீசார் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
அதேநேரம் பொதுக்கூட்டத்தை நடத்த முடியும். ஆனால் அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். புதுச்சேரியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என போலீசார் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் விஜயை ஈரோட்டுக்கு வரவழைத்து அங்கு பொதுக்கூட்டத்தை நடத்த செங்கோட்டையன் திட்டமிட்டிருக்கிறார். வருகிற 16ம் தேதி ஈரோட்டில் விஜய் சுற்றுப்பணம் செய்கிறார். ஒரு தனியார் இடத்தில் பொதுக்கூட்டமும் நடைபெறவிருக்கிறது. அதேநேரம் ரோட் ஷோ நடைபெறாது என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியார்கடம் நேற்று கூறியிருந்தார்.
விஜய் ஏற்கனவே அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில்தான் தனது மக்கள் சுற்றுப்பயணத்தை துவங்கினார். அதை தொடர்ந்து பெரியார் மண்ணான ஈரோட்டில் நடத்தினால் அது சரியாக இருக்கும் என்று செங்கோட்டையன் சொல்ல அவரின் ஆலோசனையை விஜய் ஏற்றுக் கொண்டார். எனவேதான் அது தொடர்பான வேலைகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது.