விஜய் அரசியல் வருகையால் திமுக கூடாரம் காலியாகி விடும்: செல்லூர் ராஜூ

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (08:06 IST)
விஜய் ரசிகர்கள் அதிகம் திமுகவில் இருப்பதால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததால் திமுக கூடாரம் காலியாகும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய போது  விஜய் அரசியல் வருகை குறித்து பேசினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திமுகவிலும் காங்கிரசிலும் பணியாற்றியவர், அவர் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது  யாரும் அவருக்கு ஆதரவாளிக்கவில்லை 
 
நான் தான் எம்ஜிஆர் வாரிசு என்று சொல்லிக் கொண்ட பாக்யராஜ் கட்சி ஆரம்பித்து ஒன்றுமில்லாமல் போனார். திமுகவிலிருந்து வெளியே வந்த டி ராஜேந்தர் கட்சி ஆரம்பித்து தோல்வி அடைந்தார்  
 
தற்போது தம்பி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார், விஜய் நல்ல மனிதர், இளைஞராக இருக்கிறார், அவரை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் ரசிகர்கள் அதிகம் திமுகவில் தான் இருக்கிறார்கள் என்பதால் திமுக கூடாரம் காலியாக விடும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments