Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு இல்லை: செல்லூர் ராஜூ..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:24 IST)
அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேதவாக்கு இல்லை என்றும் அவர் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஏதாவது சொல்வார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை அவர் தனது கருத்தை சொல்லி இருக்கிறார் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்ட நிலையில் அண்ணாமலை சொல்வது எங்களுக்கு வேத வாக்கு இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை அவர் கட்சியை வளர்ப்பதற்காக ஒரு தலைவராக சொல்லும் கருத்தைதான் அவர் சொல்லியிருக்கிறார் என்றும் அதில் தவறான கருத்து எதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 
 
மேலும் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது என்றும் கூட்டணி குறித்து பேசுவதற்கு தகுந்த காலம் இருக்கிறது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

விஜய் அறிவிப்புக்கு பின் உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments