Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றி கேள்வி எழுப்பி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Delhi
, வியாழன், 30 மார்ச் 2023 (17:37 IST)
டெல்லி யூனியனில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றி கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் விவகாரத்தில்  சிபிஐ போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனால், ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சியினரிடையே இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈந்த நிலையில்,  ஆம் ஆத்மி கட்சி ஆதவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஓட்டிய  நிலையில், இதற்குப் பதிலடியாக பாஜகவினரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ‘கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள்’ என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டினர்.

பாஜகவின் டெல்லி தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா சார்பில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

எனவே பிரதமர் மோடிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து,  6 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், ‘எனக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது  கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.  அவர்களின் கருத்தை வெளியிட உரிமையுண்டு, எனக்கு எதிரான அவர்கள் கூறியதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பாஜகவினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் மாறி மாறி போஸ்டர் ஓட்டி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக, இந்தி, உருது, ஆங்கிலம், பஞ்சாபில், குஜராத்தி, தெலுங்கு, வங்காளம், மராத்தி, மலையாளம், கன்னடா, ஒரியா உள்ளிட்ட 11 மொழிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர்களில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவத்தில் பாலியல் அடிமைகள்... பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்..!