Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: அமைச்சர் எல்.முருகன்
, ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (15:53 IST)
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பாஜகவின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ’2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார் 
 
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் முருகன் கூறியதை அடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக ஒன்பது தொகுதிகள் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டர் விலை உயர்வு ஏன்? கிராம மக்கள் கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!