Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது!

Advertiesment
பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது!
, வெள்ளி, 31 மார்ச் 2023 (19:21 IST)
அகமதாபாத் நகரில் பிரதமர் மோடிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அகமதாபாத் நகரின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேர் மீது வழக்குப் பதிவு  செய்த போலீஸார் இன்று அவர்களைக் கைது செய்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியுள்ளதாவது:

மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள் என்று 9 மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ) என்ற வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்களை அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டியது தொடர்பாக  நட்வர பாய்,  ஜட்டின் பாய், சந்திராகாந்த், குல்தீப் , சரத்குமார் மகேஷ்வரி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறோம்.

இதுபற்றி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதமடித்த வெயில்!