Publish Date: Mon, 23 Jul 2018 (10:00 IST)
Updated Date: Mon, 23 Jul 2018 (10:06 IST)
திமுக சட்டமன்றத்திற்கு வெளியே புலி போலவும் உள்ளே எலி போலவும் உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு துரோகம் செய்து விட்டது என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு எதிரான பல திட்டங்களை அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்துவிட்டு அதனை அதிமுக தான் கொண்டு வந்தது என வெளியே பொதுமக்களிடன் எங்கள் மீது பழி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபித்ததால் ஒன்றும் பேச முடியாத திமுக, செய்வதறியாது திகைத்தனர். திமுக சட்டமன்றத்திற்கு வெளியே தான் புலி ஆனால் உள்ளே எலி. ஆகவே எங்களை கவிழ்க்க யாராலும் முடியாது என செல்லூரார் கூறியுள்ளார்.