எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லதா, அதன் பின்னர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 200 படங்களில் நடித்தார். தற்போதும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் தற்போதும் அதிமுகவில் இருக்கும் லதா, அதிமுகவில் தனக்கு பதவி வழங்கினால் தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் பதவி வழங்குவதால முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
	அதிமுகவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு தனது பங்களிப்பும் இருப்பதாக கூறிய நடிகை  லதா, அதற்காக தான் பெருமைப்படுவதாக கூறினார். மேலும் கமல், ரஜினி, அரசியல் குறித்து கருத்து கூறிய லதா, இருவரும் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேர்பதாகவும், ஆனால் அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்துதான் மக்கள் ஆதரவு கிடைப்பது குறித்து கூறமுடியும் என்றும் லதா மேலும் கூறினார்