Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

59 வயதில் கல்லூரி செல்லும் பாஜக எம்எல்ஏ

Advertiesment
59 வயதில் கல்லூரி செல்லும் பாஜக எம்எல்ஏ
, திங்கள், 23 ஜூலை 2018 (09:38 IST)
பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தனது 59 வயதில் பி.ஏ தேர்வினை எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருப்பவர் பூல் சிங் மீனா(59). இவர் பாஜகவை சேர்ந்தவர். இவரின் சிறுவயதில் குடும்ப வறுமையின் காரணமாக அவரால் படிக்க முடியாமல் போனது. 
 
இதனால் தன்னைப்போல் யாரும் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பூல் சிங் ஏழை எளிய மாணவர்கள் படிக்க உதவி புரிகிறார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் பெரும் மாணவிகள் இலவச விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
 
பூல் சிங்கின் 4 மகள்களும் அவரை உற்சாகப்படுத்தியதால், 2017ல் 12 ஆம் வகுப்பு முடித்த அவர், சமீபத்தில் பி.ஏ. முதலாம் ஆண்டு தேர்வை எழுதினார். படிப்பதற்கு வயது ஒரு வரம்பில்லை என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா இருந்திருந்தால் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்: சந்திரபாபு நாயுடு