வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் திட்டத்தை அறிமுகப்படுத்தி பல்பு வாங்கிய பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்றுநோக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல்வாதிகளும் செல்லூர் ராஜூவை தெர்மாக்கோல் என கலாய்க்கும் அளவுக்கு அவர் பிரபலமடைந்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தில்லாக கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
பேருந்துகட்டண உயர்வு குறித்து அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தமிழக முதல்வர் பேருந்து கட்டணத்தை மனமுவந்து உயர்த்தவில்லை. பணவீக்க காலத்தில் 1 ரூபாய் பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்கமாட்டார்கள் என்றார் அதிரடியாக.