டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

Bala
வியாழன், 6 நவம்பர் 2025 (15:11 IST)
நாம் தமிழர் என்கிற கட்சியை துவங்கியதில் இருந்தே திராவிட கட்சிகளின் மீது சேறை வாரி இறைத்து வருகிறார் சீமான். கட்சி துவங்கியதே திராவிட கட்சிகளை திட்டுவதற்காகத்தான் என்பது போல அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று நான்தான், இளைஞர்கள் என்னை ஆதரிக்க வேண்டும், நான் முதல்வரானால் தமிழகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துவேன், குறிப்பாக தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் பண்பாட்டுக்காகவும் பாடுபடுவேன் என்றெல்லாம் அவர் பேசி வருகிறார்.
 
மேடைகளில் சீமானின் ஆக்ரோஷமாக பேசுவதை கேட்டு புல்லரித்து பல இளைஞர்கள் அவரை ஆதரித்து வருகிறார்கள். இதன் அதன் காரணமாக அவரின் வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 30 லட்சம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது. 
எனவே திமுக, அதிமுக போல பணம் கொடுக்காமல் நான் வாங்கிய ஓட்டு இது என பேசி வருகிறார் சீமான்.
 
அதேநேரம் சீமான் மாறி மாறி பேசி வருவதாக திமுகவினரும், நெட்டிசனங்களும் பல வீடியோக்களை பகிர்ந்து அவரை சமூக வலைத்தளங்களில் அட்டாக் செய்து வருகிறார்கள். மேலும், தற்போது அதிக அரசியல் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அரசியல் தலைவராகவும் சீமான் இருக்கிறர். ஒருபக்கம், கடந்த பல மாதங்களாகவே திமுகவை திட்டுவதை விட்டுவிட்டு அவர் நடிகர் விஜயின் தாவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே, விஜய் ரசிகர்களும் அவரை திட்டி வருகிறார்கள்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய சீமான் ‘டாஸ்மாக் மது கடைகளில் விற்கப்படும் குவாட்டருக்கு ‘வீரன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படி செய்யலாமா? நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களை இது அவமதிக்காதா? என காட்டமாக பேசியிருக்கிறார். 
இதையடுத்து ‘ நேற்று அண்ணன் வீரன் சாப்பிட்டு இருக்காப்ல.. வயிறு எரியுது போல.. நல்லா சரக்கா அடிங்க அண்ணே’ என ஒருவரும். ‘அப்ப சீமான்னு பேர் வெச்சா கரெக்டா இருக்குமா?’ என்று ஒருவரும், ‘இப்ப அண்ணன் வீரன் சாப்பிட்டுதான் வந்துதான் பேசுறாப்ல’.. என்றும் பதிவிட்டு அவரை கலாய்த்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு ரூ.11.95 லட்சம் ஏமாந்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகம் உள்பட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டவர் விடுத்தவர் ஐடியில் பணிபுரியும் இளம்பெண்ணா? அதிரடி கைது..!

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments