நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தந்தை பெரியார் குறித்து கருத்து தெரிவித்த போது, உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள அம்மா, சகோதரி, மகள் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியதாக கூறினார்.
அவரது சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திராவிட கட்சிகள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அவரது வீட்டை முற்றுகையிட பெரியார் திராவிட கழகத்தினர் சென்றபோது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதையும் மீறி, அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர். பெரியார் குறித்த தனது கருத்தை, சீமான் திரும்ப பெறாவிட்டால், தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.