Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

Prasanth Karthick

, வியாழன், 9 ஜனவரி 2025 (10:40 IST)

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

 

நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்தும், அவரது நோக்கங்கள் குறித்தும் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் காலையிலேயே அவரது வீட்டிற்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், போலீஸாரும் குவிக்கப்பட்டதால் சீமான் கைது செய்யப்பட்ட போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

 

ஆனால் தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் வந்ததால் அந்த தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

அதை மீறி அவரது வீட்டை முற்றுகையிட தபெதிகவினர் முயற்சி செய்த நிலையில் அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

 

Sudden twist.. Periyar movement members who tried to blockade Seeman's house were arrested!

 

Seeman controversy speech about periyar, Periyar activists arrested, NTK, நாம் தமிழர் கட்சி, பெரியார் இயக்கத்தினர் கைது, சீமான் சர்ச்சை பேச்சு,

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!