Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

Siva
புதன், 30 ஏப்ரல் 2025 (18:36 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையருக்கு, நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் ஒரு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு ஸ்டோரி பதிவில், சீமானுக்கு உயிர் அச்சுறுத்தலான வார்த்தைகள் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, அந்த ஸ்டோரி பதிவில் ‘சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும்’ என்பதுடன், ‘நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக விரைவில் போட்டி நிலவும்’ என்ற விதத்தில் மிரட்டல் கூறப்பட்டதாக புகார் கூறுகிறது.
 
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த மிரட்டலை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனக் கட்சியினரும், ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

5 மாநிலத்தில் ஒரு பாகிஸ்தானியர் கூட இல்லை.. இந்தியாவில் இருந்து 786 பேர் வெளியேற்றம்..!

விஜய் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு.. கட்சி விதியை மீறினால் கடும் நடவடிக்கை..!

பயங்கரவாதிகளை திருமணம் செய்த 60 பாகிஸ்தான் பெண்கள் நாடு கடத்தல்.. இந்தியா அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments