Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலத்தில் ஒரு பாகிஸ்தானியர் கூட இல்லை.. இந்தியாவில் இருந்து 786 பேர் வெளியேற்றம்..!

Siva
புதன், 30 ஏப்ரல் 2025 (18:30 IST)
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பெரிய தாக்குதலை நடத்தினர். இதில் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். 
 
இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர், பாகிஸ்தானை மீது இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை உடனடியாக ரத்து செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களுக்கு உடனடியாக நாடு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அட்டாரி – வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் திரும்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 786 பேர் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 55 அதிகாரிகளும் உள்ளடங்குவார்கள். மேலும்  அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய  5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிப்பதாக பாகிஸ்தானும் இந்தியர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது. இதுவரை 1,465 இந்தியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 25 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments