நிவாரண உதவியை பெறுபவர்களை வீட்டிற்கு வரவழைத்து விஜய் கொடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில், விஜய் செய்தது சரிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், களத்திற்கு நேரடியாக வராமல், பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று விஜய் நினைத்தது பாராட்டத்தக்கது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய் போன்ற பெரிய நடிகர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்றால் அவரை பார்க்க கூட்டம் அதிகரிக்கும். அந்த கூட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தான் விஜய் களத்திற்கு செல்லவில்லை.
கூட்டம் கூடினாலும் விமர்சனம் செய்கிறீர்கள், விஜய் உதவி செய்யும் எண்ணத்தையும் விமர்சனம் செய்கிறீர்கள். விஜய் அளித்த நிவாரணத்தை கூட மற்றவர்கள் அளிக்கவில்லை. எனவே, நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை நாம் பாராட்ட வேண்டும்," என்று சீமான் குறிப்பிட்டார்.