Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கலுக்கு இலவசம்! இதைவிட அவமானம் உண்டா? – சீமான் விமர்சனம்!

Advertiesment
பொங்கலுக்கு இலவசம்! இதைவிட அவமானம் உண்டா? – சீமான் விமர்சனம்!
, வெள்ளி, 23 டிசம்பர் 2022 (13:15 IST)
வரும் ஆண்டில் பொங்கலுக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படுவது குறித்து நா.த.க சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு அரசு சார்பில் ரேசன் கடைகள் வாயிலாக இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்குவது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு திமுக பொறுப்பேற்ற நிலையில் பரிசு பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதில் இடம்பெற்ற உணவு பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனால் இந்த முறை பொங்கலுக்கு இலவச அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் முந்தைய காலங்களில் கரும்பும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கரும்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இலவச அறிவிப்பு குறித்து விமர்சித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இன அவமானமாகவே நான் கருதுகிறேன். பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தர வேண்டும் என பலர் பேசுவதை நான் ஏற்கவில்லை. முழு கரும்பு தராவிட்டால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்து: மத்திய அரசு ஒப்புதல்;