இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் புதிதாக 3 ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில் சீனாவில் அதிகமாக வைரஸ் பரவி வருவதால் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து தமிழ்நாடு வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.