மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசு சற்றுமுன் ஒப்புதல் அளித்ததை அடுத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா குணம் மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்று இந்த மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாக செலுத்தும் மருந்துகளில் ஒன்றாக இன்று முதல் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
மேலும் பூஸ்டர் மருந்தாக இந்த மருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா நோய்த் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் கொரோனா வெகுவாக தடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது