அண்ணா பல்கலைக்கழக மாணவ-மாணவிகளின் பாதுகாப்பிற்காக 30 புதிய சிசிடிவி மற்றும் 40 புதிய செக்யூரிட்டிகள் ஏற்பாடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், மாணவ-மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின்படி 30 சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 40 காவலாளிகளை கூடுதலாக நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை உடனடியாக சரி செய்யவும் நிர்வாகம் உத்தரவு பிறப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் ஒருமுறை தவறான நிகழ்வு நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.