அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிமுக சார்பில் "யார் அந்த சார்?" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யும் போது "சார்" என்று யாரிடமோ பேசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த "சார்" என்பவர் மேலிடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதிமுக திடீரென நேற்று "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் போஸ்டரை சென்னை முழுவதும் ஒட்டியிருந்தது.
எடப்பாடி பழனிச்சாமி உடன் கூடிய இந்த போஸ்டர், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.