Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

Prasanth Karthick

, சனி, 28 டிசம்பர் 2024 (16:06 IST)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவிக்கு ரூ.25 இடைக்கால நிவாரணம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

 

அதன்படி இன்று இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை நியமித்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

 

மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட விவரம் “இந்த விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஒரு பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது?

 

ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது. முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியே கசியாமல் அரசு உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?