Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின், அம்பானி சந்திப்பு – அழைப்பிதழோடு நிதியும் கைமாறியதா ?

ஸ்டாலின், அம்பானி சந்திப்பு – அழைப்பிதழோடு நிதியும் கைமாறியதா ?
, புதன், 13 பிப்ரவரி 2019 (12:08 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தொழிலதிபர் அம்பானியின் சந்திப்பு அரசியல் உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி மகளின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்த முகேஷ் அம்பானி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்குக் காரணமாக அடுத்த மாதம் நடக்க இருக்கும் முகேஷ் அம்பானியின் மகனின் திருமணம் கூறப்பட்டது. தன் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கவே அம்பானி ஸ்டாலின் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் வெளியுலகிற்காக இந்த திருமண அழைப்பிதழ் விஷயம் சொல்லப்பட்டாலும் சில ரகசியக் காரணங்களும் இந்த சந்திப்பிற்குக் காரணமாக இருந்தன என்று சில தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் சில நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. எப்படியும் தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் ஆட்சிமாற்றம் நடைபெறப் போகிறது என இந்தியா முழுவதிற்கும் தெரியும்.
webdunia

இந்தியா முழுமைக்கும் தெரிந்த விஷயம் அம்பானிக்குத் தெரியாமல் இருக்குமா ?. ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களின் பக்கம் நிற்பதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் செயல் தந்திரம். அதன் படி தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சிமாற்றம் வரலாம் என்றும் அப்போது ஸ்டாலின்தான் முதல்வராக இருப்பார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகளைப் பெற்ற அம்பானி அதை முன்னிட்டே ஸ்டாலினிடம் நட்பை வளர்த்துக்கொள்ள இந்த சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தேர்தல்களில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வரும் திமுகவும் கையில் போதிய நிதி இல்லாமல் தவிப்பதால் அவர்களுக்கு தேர்தலுக்கான நிதியாக ஒருப் பெரிய தொகையும் திமுக வுக்கு அம்பானியிடம் இருந்து கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் கைமாறாக ஆட்சிக்கு வந்தபின் அம்பானிக்குத் தேவையான உதவிகளை திமுக கண்டிப்பாக செய்யும் என்றும் ஸ்டாலின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியைப் போலவே கடந்த மாதம் தொழிலதிபர் ரத்தன் டாடாவும் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருகிறது ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ! – வீடு தேடிவரும் மளிகை, மருந்து பொருட்கள்