Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

89 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் திமுக ஒரு கூஜா; கேப்டன் மகன் ஆவேசம்

Advertiesment
89 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் திமுக ஒரு கூஜா; கேப்டன் மகன் ஆவேசம்
, புதன், 13 பிப்ரவரி 2019 (07:46 IST)
89 எம்.எல்.ஏக்கள் இருந்தும் திமுக கூஜா போல் செயல்படுவதாக கேப்டன் விஜயகாந்த் மகன் பிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தமிழகத்தில் இல்லாத குறையை அவரது மகன் பிரபாகரன் அவ்வப்போது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னையில் தேமுதிக சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரபாகரன் பேசியதாவது:

விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை அடித்தால் அது பெரிதுபடுத்தப்பத்தப்படுகிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோவப்படுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. திமுக 89 சீட்டு வைத்திருந்தாலும் அது கூஜா போல்தான் செயல்பட்டு வருகிறது.

webdunia
இங்குள்ள பெண்கள் மற்றும் ஆண்களை பார்க்கும்போது என் அப்பா, அம்மாவை பார்ப்பது போல் மகிழ்ச்சியாக உள்ளது.  தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேமுதிக கொடி பறக்கிறது . எனவே வரும் மக்களவை தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறினார்

மேலும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், அவர் சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் தேமுதிக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என்றும் விஜய் பிரபாகரன் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிற்கு 'காதலர் தினம்' தேவையா?