தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் உள்பட பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் தொற்று பரவும் ஆபத்தான சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு முடிவு எடுப்பது கடினம் தான் என்று கூறியுள்ள மத்திய அரசு, இது தொடர்பாக அனைத்தையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி இழப்பும் கவனத்தில் கொண்டு மாநில அரசுகளே ஆலோசனை செய்து பள்ளிகளை திறக்கலாம் என்று மாநில அரசுகளுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் இளம் வயதினருக்கு தடுப்பூசி குறித்து மருத்துவ குழுவின் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுத்து பள்ளிகளை திறக்க தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்