10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கருப்பு பணம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது நிதித்துறை இணை அமைச்சர் இது குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கருப்பு பணத்தை திரும்பிக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
கருப்பு பண தடை சட்டத்தின் கீழ் 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதோடு இதுவரை 8,216 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தார்.