Publish Date: Thu, 02 May 2019 (09:16 IST)
Updated Date: Thu, 02 May 2019 (09:18 IST)
ஏற்கனவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஃபனி புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் நிலவி வருகிறது. வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் 43 முதல் 44 C வரை வெப்பமும், சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 40 C வெப்பமும் அதற்கு மேலும் இருந்து வருகிறது
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜுன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பள்ளி திறக்கும் தேதியை தள்ளி போட வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன், 'தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்