Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டு ஊசியால் மாணவியைக் குத்திய தலைமை ஆசிரியர்

Advertiesment
மாட்டு ஊசியால் மாணவியைக் குத்திய தலைமை ஆசிரியர்
, வெள்ளி, 23 மார்ச் 2018 (10:19 IST)
திருச்சி அருகே தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவியை மாட்டு ஊசியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பெரிய ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் தீனா மேரி(9). தீனா மேரி அதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவர் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். வகுப்பறையில் தீனா மேரி பாடத்தை கவனிக்காமல் தான் கொண்டு வந்திருந்த மாட்டு ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
 
இதனைப்பார்த்த தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ போபமடைந்து தீனாமேரி வைத்திருந்த ஊசியைப் பறித்து, அவர் முதுகில் குத்தியுள்ளார். இதனால் மாணவி வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். மேலும்  தீனா மேரிக்கு முதுகில் வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்துள்ளது.
 
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் ஜான் பிரிட்டோ மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி ஜான் பிரிட்டோ மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் திருச்சியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு