Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மிகவும் மோசமான துறையாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது- நெல்லை முபாரக்!

தமிழகத்தில் மிகவும் மோசமான துறையாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது- நெல்லை முபாரக்!

J.Durai

, புதன், 11 செப்டம்பர் 2024 (15:30 IST)
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடந்த  கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நெல்லை முபாரக்......
 
ஒன்றிய அரசு சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக வஃக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
வஃக்பு சொத்துக்களை அம்பானிகளும், அதானிகளுக்கும் விற்கவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
 
சென்னை பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் கோரிக்கையை செவிமடுக்காமல் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனை ஒன்றிய அரசும், மாநில அரசும் கைவிட வேண்டும். மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும்.
 
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய  அதிகாரிகள் அதிக அளவு லஞ்சம்  கேட்கிறார்கள். அதனை  தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவு அமைத்திட வேண்டும்.
 
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் மாட்டிறைச்சி தொடர்பாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அது போன்ற சம்பவங்களை தடுக்க
 
சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் வன் கொடுமை தடுப்பு சட்டம் போல் சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும்.
 
ஸ்டாலின் அமைச்சரவையில் மிகவும் மோசமான துறையாக பள்ளி கக்வி துறை உள்ளது. பள்ளி கல்வி துறை பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பள்ளி கல்வி துறையை நிர்வகிக்கும் இடத்தில் அந்த துறையின் அமைச்சர் இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. முதலமைச்சர் அந்த துறையை தனி கவனம் எடுத்து கண்காணிக்க வேண்டும்.
 
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நவம்பர் 16 ஆம் தேதி முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதம் வழங்க வேண்டும், நீண்ட நால் சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை முன் வைத்து  முன்வைத்து சென்னையில் பேரணி நடத்த உள்ளோம்.
 
எடப்பாடி ஆட்சியில் படிப்படியாக மது கடைகள் மூடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கடைகள் அதுகரிக்கப்பட்டது. மதுவில் மிதக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மதுவிற்கு எதிராக வி.சி.க நடத்தும்
மாநாடு தமிழ்நாட்டிற்கு தேவையான ஒன்று அதனை நாங்கள் ஆதரிக்கிறோம்.
 
2011 கணக்கெணடி 5.28 சதவீதம் முஸ்லீகள் உள்ளனர். தற்போது அது கூடுதலாக இருக்கும் எனவே 7 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கிறோம்.
 
பீகாரை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தமிழக அரசு தட்டிக்கழிக்க கூடாது.
 
இட இதுக்கீடு கூடாது என்பது தான் பா.ஜ.க வின் எண்ணம்.
 
மத நடவடிக்கைகள் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தப்பட  வேண்டும்.
 
பத்திரிக்கையாளர் அடையாள அட்டை பெற கடுமையான விதிகளை தமிழக விதித்துள்ளது.  அதை  எல்லோருக்கும் உதவி கிடைக்கும் வகையில் எளிதாக்க வேண்டும் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.! லேசான காயம் என தகவல்.!!