Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.! லேசான காயம் என தகவல்.!!

Actor Jeeva

Senthil Velan

, புதன், 11 செப்டம்பர் 2024 (15:28 IST)
கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா வந்த கார் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவரும், அவரது குடும்பத்தாரும் உயிர் தப்பினர்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். 

அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே வந்துபோது, திடீரென குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது.  இதனால் நிலை தடுமாறிய கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக் குள்ளானது.
 
இந்த  விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
இந்த விபத்தில் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜீவா விபத்து சிக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் - டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்.! அன்புமணி வலியுறுத்தல்.!!