Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌசல்யாவை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்த நடிகர் சத்யராஜ்

Advertiesment
கௌசல்யாவை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்த நடிகர் சத்யராஜ்
, திங்கள், 10 டிசம்பர் 2018 (16:03 IST)
ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா சக்தி என்பவரை மறுமணம் செய்ததற்கு சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கலப்புத் திருமணம் செய்ததற்காக சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கௌவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்.
webdunia
நேற்று  கோவையில் கௌசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். கவுசல்யாவின் மறுமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ பதிவில், சாதி வெறியர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சக்தியை திருமணம் செய்து கொண்ட, தந்தை பெரியாரின் பேத்தி கௌசல்யாவிற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் 6.1 ஜி.பி. டேட்டா - பி.எஸ்.என்.எல். அதிரடி ஆஃபர்!