Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜ் மகளுக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி! நன்றி தெரிவித்த சிபிராஜ்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (19:51 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
"லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீம், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.
 
மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்".
 
திவ்யா சத்யராஜ் அவர்களின் இந்த அறிக்கையை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த நேரத்தில் மிக அவசியமான கருத்து என்றும் அவர் தெரிவித்திருந்தார். திவ்யாவின் அறிக்கையை தனது டுவிட்டரில் பதிவு செய்த சிவகார்த்திகேயனுக்கு திவ்யாவின் சகோதரர் சிபிராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments