Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விறுவிறுப்பாக நடைபெறும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வேலைகள்... ரிலீஸ் எப்போ?

Advertiesment
விறுவிறுப்பாக நடைபெறும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வேலைகள்... ரிலீஸ் எப்போ?
, திங்கள், 25 மே 2020 (09:48 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான "நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது.

அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து தனது இரண்டாவதாக டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவருகிறார். KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை திசைதிருப்பியது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படவேலைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது. எனவே மீதமுள்ள ஒருசில காட்சிகள் எடுத்துமுடித்தவுடன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளனர். படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி ஸ்டைலில் கியூட் எக்ஸ்பிரஷனுடன் குட்டி ஸ்டோரி சொல்லும் வேதிகா - வீடியோ!