Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று வரை ரூ.11 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்! – தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (14:29 IST)
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணம், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது. கடந்த 5 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு 11 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி! - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

2 மணிநேரமாக இதயத் துடிப்பு இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்களால் உயிர் பிழைத்த நபர்..!

புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தல்.. அவசரநிலை பிரகடனம்.. டிரம்பின் முதல் நடவடிக்கை..!

மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்.. 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments