ஆறு தொகுதிக்கு ஒத்துக்காதீங்க…! – சென்னையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

ஆறு தொகுதிக்கு ஒத்துக்காதீங்க…! – சென்னையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

Advertiesment
ஆறு தொகுதிக்கு ஒத்துக்காதீங்க…! – சென்னையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்!
, வியாழன், 4 மார்ச் 2021 (13:27 IST)
திமுக – விசிக கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ஆறு தொகுதிகளை ஏற்பதில்லை என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் வழங்குவதாக பேசப்பட்டதற்கு விசிக மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மறு பேச்சுவார்த்தைக்கு திமுக விசிக தலைவர் திருமாவளவனை அழைத்துள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திருமாவளவன் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் விசிகவினர் சென்னையில் ஆறு தொகுதிகள் வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் களம் இறங்கும் எம்.ஜி.ஆர் பேரன்! – அதிமுகவில் விருப்பமனு!